அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?.. அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வலம்வரும் தகவல்கள் வதந்தி எனவும் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
Also Read | "ரிட்டையர் ஆகுற எண்ணமே வரல".. இளைஞர்களுக்கே Tough கொடுக்கும் இரண்டாம் உலகப்போர் வீரர்..!
கட்டண உயர்வு
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கிவரும் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவிவந்த நிலையில், அது வெறும் வதந்தியே எனக் கூறியுள்ளார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். இந்நிலையில் அறிக்கை ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில்,"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு அட்டவணை ஏதும் தயாராகவில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்த விதி
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்து அந்த அறிக்கையில்,"இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தும்போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகளின் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அவ்வாறு தான் பர்மிட் வழங்கப்படும். கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த அட்டவணையை தவறாக புரிந்துகொண்டு, "தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலவச பயண திட்டம்
தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தின் கீழ், இதுவரையில் 112 கோடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அமைச்சர், ஏழை எளிய மக்களை நலன்கருதி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.
மேலும், "கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" எனவும் அமைச்சர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8