யம்மாடி.. என்ன ஷாட்டுங்க இது.!.. கிரவுண்டை விட்டு வெளியே பறந்த பந்து.. பக்கத்துல நின்னவரோட ரியாக்ஷனை பாருங்க.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கு இந்திய தீவுகள் அணியின் ரோவ்மன் பாவல் நேற்றைய ஆட்டத்தில் 104 மீட்டர் சிக்ஸர் விளாசி அனைவரையும் திகைப்படைய செய்தார். இதனை நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றிருந்த அகீல் ஹுசைன் பிரம்மித்துப்போய் பார்க்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வண்டி ஒட்டுறவங்க இதெல்லாம் செஞ்சா 10 ஆயிரம் ருபாய் Fine.. தமிழக அரசு அதிரடி.. முழு விபரம்..!
இந்த வருடத்துக்கான T20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றன. இதற்காக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகின்றன. அதே வேளையில், இந்த உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மற்றொருபக்கம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. அதில் நேற்று மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் களம் கண்டன. தகுதி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இரு அணிகளும் இருந்ததால் நேற்றைய போட்டி சுவாரஸ்யமாகவே சென்றது.
ஹோபர்ட் -ல் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சார்லஸ் 45 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளையும், முசாரபாணி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜேசன் ஃபோல்டர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, கடைசி ஓவரை வீச முசாரபாணி வந்தார். அப்போது ஸ்ட்ரைக்கர் எண்டில் ரோவ்மன் பாவலும், நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் அகீல் ஹுஸைனும் இருந்தனர். அப்போது முசாரபாணி வீசிய பந்தை மிட் விக்கெட்டில் அடித்தார் பாவல். அந்த பந்து மைதானத்தை விட்டே வெளியே சென்று விழுந்தது. 104 மீட்டர் அடிக்கப்பட்ட இந்த சிக்ஸரை பார்த்த அகீல் தனது தலையில் கைவைத்தபடி நின்றிருந்தார். அதன்பின்னர், பாவலை கண்டு அவர் சிரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
— Vaishnavi Iyer (@Vaishnaviiyer14) October 19, 2022
Also Read | பாம்பன் பாலம் : 10 நாளுல 2வது தடவ.. நேருக்கு நேரா வந்த பேருந்துகள்.. அடுத்த செகண்டுல நடந்த துயரம்..!