'என்ன மாப்ள, யாரு பொண்ணுன்னு கண்டுபுடிங்க பாப்போம்'... 'கல்யாண வீடுன்னா இப்படில இருக்கணும்'... வைரலாகும் செம கலாய் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்யார் மணப்பெண் என்பதைக் கல்யாண மாப்பிள்ளை கண்டுபிடிக்கக் கல்யாண வீட்டில் நடந்த fun விளையாட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண வயதை அடைந்த ஒவ்வொருவருக்கும் தங்களது திருமணம் குறித்த பல்வேறு கனவுகள் இருக்கும். திருமணத்தை எப்படி நடத்துவது, என்ன உடை உடுத்துவது, என்ன சாப்பாடு போடுவது, திருமண அலங்காரங்கள் எனப் பலவற்றைத் திட்டம் போட்டு திருமணத்தை நடத்துவார்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது மட்டுமல்லாமல், பல நாள் சந்தித்திராத உறவினர்களின் வருகை, ஏன் ஏதோ சிறிய சண்டையில் பேசாமல் போன நண்பனாக இருந்தாலும் நிச்சயம் திருமணம் என்றால் வந்து நிற்பான்.
அந்த வகையில், அந்த ஒரு நாள் நமது வாழ்நாள் முழுவதும் அசைபோடும் அளவிற்குப் பல நினைவுகளை நமக்குக் கொடுக்கும். தற்போது கொரோனா காலம் என்பதால் பெரிய அளவிற்கு உறவினர்களையோ, நண்பர்களையோ அழைத்து திருமணத்தை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் திருமணத்தில் நடக்கும் பல சந்தோஷமான விஷயங்களைப் பலரும் தற்போது மிஸ் செய்வார்கள்.
அந்த வகையில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்று, திருமணம் என்றால் இப்படி ஒரு funனோடு இருக்கவேண்டும், எனப் பலரையும் நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்துள்ளது. அந்த வீடியோவில் கல்யாண மாப்பிள்ளையின் கண்ணைத் துணியால் கட்டி வைத்துள்ளார்கள். பின்னர் ஒவ்வொருவராக வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்க்கிறார்கள். அப்போது மாப்பிள்ளை அது கல்யாண பெண்ணா என்பதைச் சரியாகக் கூறவேண்டும்.
இவ்வாறு பலரும் வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துப் பார்த்த நிலையில், இறுதியாகக் கல்யாண பெண்ணே வந்து மணமகனின் கையை பிடித்த நிலையில், ஒரு வழியாகக் கல்யாண மாப்பிள்ளையும் சரியான பதிலைக் கூறி விட்டார். ஒரு 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்யாண வீடு களைக் கட்டும். சொந்தக்காரர்கள், நண்பர்கள் எனப் பலரும் வீட்டில் குவிந்திருப்பார்கள்.
ஆனால் தற்போதைய இயந்திர வாழ்க்கையில் அதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் போனது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது எங்களது சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் வருகிறது எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
Best one 😂😍 pic.twitter.com/awhyi0CXFh
— ᥬ😍᭄சிவசங்கரி ᥬ😍᭄ (@sankariramjai) June 22, 2021