'FRIENDSன்னு உங்கள கூப்டதுக்கு என்ன பண்ணணுமோ அத பண்ணிட்டீங்க'... 'மேடையில இப்படி ஒரு கிப்ட்டா'... மணமக்களை திணற வைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் கொடுத்த பரிசு தொடர்பான வீடியோ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Group of Friends prank their best friend on his wedding Group of Friends prank their best friend on his wedding](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/group-of-friends-prank-their-best-friend-on-his-wedding.jpg)
நண்பர்களின் திருமணம் எல்லோருக்குமே ஒரு மறக்க முடியாத பல நினைவுகளைக் கொடுக்கும். உறவினர்களின் திருமணத்தைத் தாண்டி நண்பர்களின் திருமணத்தில் பங்கேற்பது என்பது பலருக்கும் ஒரு அலாதியான ஒரு சந்தோசமே. பல பழைய நண்பர்களைச் சந்திக்க முடியும், ஏதாவது மனக் கசப்புகள் இருந்தால் கூட அவை அனைத்தும் திருமணத்தில் மறைந்து பலரும் அவர்களின் பழைய நினைவுகளை அசை போடுவது உண்டு.
அந்த வகையில் நண்பனின் திருமணத்திற்குப் பரிசு கொடுக்கிறோம் என்ற பேரில் நண்பர்கள் செய்யும் குறும்புகளும் எண்ணற்றவை. அந்த வகையில் குறும்புக்கார நண்பர்களிடம் சிக்கிய மணமக்கள் பட்ட சுவாரசிய திண்டாட்டம் குறித்த வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது. ஒரு அட்டைப் பெட்டியில் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதைப் போன்று பேக் செய்து அதை மணமக்களிடம் கொடுத்துத் திறக்கச் சொல்கிறார்கள்.
மணமக்களும் அவ்வாறே திறக்க முதலில் பலூன்கள் அதிலிருந்து வருகிறது. பின்னர் உள்ளே என்ன தான் இருக்கிறது எனப் பார்த்தால் சிறியதாக பேப்பர் போன்று ஒன்றை மடித்து அதையும் கிப்ட் பேக் செய்து வைத்திருந்தனர். அதில் என்ன இருக்கிறது எனத் திறந்து பார்த்தால் உள்ளே 'காசு இல்ல பா' என வடிவேல் கையை தூக்கிக் காட்டுவதைப் போல ஒரு பேனரை அடித்து வைத்திருந்தார்கள்.
உள்ளே ஏதோ பரிசு இருக்கிறது என ஆசை ஆசையாகத் திறந்த மணமக்களுக்கு அவரது நண்பர்கள் பெரிய பல்ப்பை கொடுத்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)