'சென்னையில் அமுக்கு டுமுக்கு டமால் டுமால் தான்'... உற்சாகத்தில் சென்னைவாசிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக உள்ளதால், பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையைப் பொறுத்தவரைத் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணாசாலை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் இருள் சூழ்ந்து சென்னை ரம்மியமாகக் காட்சி அளித்து வருகிறது. இது சென்னைவாசிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
