'அடி அடின்னு அடிச்சாங்க!'.. 'அங்க இருந்து கார்ல'.. வெளிநாட்டுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 29, 2019 05:07 PM

வெளிநாட்டில் வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு சென்ற தமிழ்நாட்டு பெண்மணி பரிதாபமான நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது.

Tamilnadu Woman rescued from muscat, after she assaulted

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நதியா என்கிற பெண்மணியை, ஜெயகுமாரி என்கிற ஏஜெண்டு ஒருவர் ஆசை காட்டி வெளிநாட்டில் வேலை செய்வதற்கு தூண்டி மஸ்கட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் போனவர் போன் கூட பண்ணவில்லை என்று நதியாவின் சகோதரிகளும், நதியாவின் சகோதரியின் கணவரும் தவித்துள்ளனர்.

அந்த சமயத்தில்தான் இதேபோன்று வெளிநாட்டில் வேலைக்கு சென்று சிக்கிக்கொண்ட பெண்மணி ஒருவரை கன்னியாபாபு என்கிற எய்ம்ஸ் என்ஜிஓ-வைச் சேர்ந்த ஒருவர் மீட்ட செய்தியை பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பார்த்து, நம்மை தொடர்பு கொண்டனர். பிஹைண்ட்வுட்ஸ் மூலமாக தகவல் கன்னியாபாபுவுக்கு செல்ல, ஆம்பூர் ஐபிஎஸ் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினரின் உதவியுடன் நதியா மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய, நதியா மஸ்கட்டில் ஒரு பெண்ணின் வீட்டுக்கு வேலைக்கு சென்றதாகவும், ஆனால் போன இடத்தில் அந்த பெண்ணின் அம்மாவின் வீட்டுக்கும் காரில் பயணம் செய்து வேலை செய்ய வேண்டியிருந்ததாகவும், இந்த இரட்டிப்பு வேலைகளை செய்வதற்கு தன்னால் இருவேறு இடங்களுக்கு பயணம் செய்ய முடியவில்லை என்றும், இதனால் தனக்கு இரத்தப் போக்கு உண்டானதாகவும் கூறி கதறியுள்ளார்.

இதனை அடுத்து, நதியா தன் வீட்டுக்கு போன் செய்ய, அவர் வேலை செய்த வீட்டுக்காரர்கள் ஒரு போன் வாங்கித் தந்ததாகவும் ஆனால் அந்த போனில் நதியா தன் வீட்டுக்கு போன் செய்து பேசுவதெல்லாம் கண்காணிக்கப்பட்டதாகவும், கூறிய நதியா, தன்னை அவர்கள் அடி அடி என்று அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால், தான் தற்கொலை செய்ய முயற்சி செய்துகொண்டு கையை அறுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய கன்னிகாபாபு, நதியாவைப் போல பலரும் இப்படி மாட்டியிருக்கிறார்கள் என்றும், நதியாவை, ஆம்பூர் போலீஸாரின் உதவியுடன் தான் மீட்டதாகவும், ஆனால் வெளிநாட்டுக்கு சட்டப்பூர்வமாக வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் ஏஜெண்டுகளை நாடுவதற்கு பதிலாக அரசு உதவி மையங்களை நாடலாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து நதியாவின் மொத்த குடும்பமும், கன்னியாபாபுவும் பிஹைண்ட்வுட்ஸ்க்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : #WOMENSAFETY #JOB