'மீன் வித்தேன்'...'பரோட்டா போட்டேன்'... எனக்கு எவ்வளவு ஓட்டு?... 'மன்சூர்' பெற்ற ஓட்டுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | May 23, 2019 05:22 PM
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.அதே நேரத்தில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக, அதிமுக தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.இதனிடையே திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் மாலை நேர நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் திமுக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.