தேர்தல் முடிவுகள் : ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் திமுக.. எந்தெந்த இடங்களில் வெற்றி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சரியாக காலை 8 மணிக்கு இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆரம்பம் முதலே பல இடங்களை திமுக கைப்பற்றி வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி 1 மற்றும் 3வது வார்டுகளில் திமுக வெற்றி; 2வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 21 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, 2வது வார்டில் திமுகவின் ஸ்டீபன்ராஜ் 338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 17 இடங்களில் திமுக முன்னணி பெற்றுள்ளது.
நகராட்சிகளை பொறுத்தவரை திமுக 224 இடங்களிலும் அதிமுக 52 இடங்களிலும் 49 இடங்களில் சுயேச்சை/ பிற கட்சிகளும் முன்னணியில் உள்ளன.

மற்ற செய்திகள்
