அமைச்சர் எல்.முருகன் ஓட்டை இன்னொருவர் கள்ள வாக்காக போட்டுள்ளார்.. அண்ணாமலை போட்ட ஷாக் ட்வீட் - தேர்தல் ஆணையம் கொடுத்த பதில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டுள்ளதாக அண்ணாமலை ட்வீட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குான வாக்குப் பதிவானது இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குபதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரத்து 369 மாநகராட்சி கவுன்சிலர், 3 ஆயிரத்து 824 நகராட்சி கவுன்சிலர், 7 ஆயிரத்து 409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 602 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
கள்ள ஒட்டு
சென்னை அண்ணா நகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டு விட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
பதில் அளித்த தேர்தல் ஆணையம்..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக தேர்தல் ஆணையம் எல்.முருகனின் ஓட்டை வேறு யாரும் செலுத்தவில்லை" எனத் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து, சற்று முன் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்குச் சாவடிக்கு சென்று ஒட்டு அளித்தார்.
கேள்வி பதில்
தேர்தல் பரப்புரை களத்திலேயே ஆளும் திமுக வை அண்ணாமலை விமர்சித்து வந்தார். கோவை மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, இஸ்திரி போட்டும், வேறு இடத்தில் தோசை சுட்டும் மக்களிடம் வாக்கு கேட்டது அப்போது வைரலானது.
இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் தலைமையிலான திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நகைக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டங்கள் அனைத்து பகுதி மக்களையும் சென்றடையவில்லை என எதிர் கட்சியினர் குற்றம் சுமத்தினர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் திமுக-விற்கு எதிரான அரசியல் ஆயுதமாக பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் `தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தி.மு.க அரசு, நகைக் கடன் தள்ளுபடி செய்யாதது ஏன்? குடும்பப் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்காதது ஏன்?' என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்,'மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்ற மகளிர் உரிமைத் தொகையை விரைவில் வழங்கப்போகிறோம். நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும்' என அதிரடியாக பதில் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.