அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்!.. கோரஸ்-ஆக ஆதரவாளர்கள் முழங்கிய 'அந்த' வாசகம்!.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரும்போது அவரது ஆதரவாளர்கள் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் முதலாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது.
இதில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என சொல்லப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலருடன் சசிகலா தொடர்ந்து பேசி வருவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வகுக்க வேண்டிய வியூகம் குறித்தும் பேசப்படும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை 'ஒற்றைத் தலைமை' எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
