‘முறைக்கேடு நடப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டு’!.. ஒரு தொகுதியில் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மும்முறமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 153 இடங்களிலும், அதிமுக 80 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திருமங்கலம் தொகுதியில் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் திமுக சார்பில் மணிமாறன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலலையில் செங்கப்படை வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பதிவு எண் மாறுபட்டிருந்ததால் திமுக வேட்பாளர் மணிமாறம் மற்றும் அவரது முகவர்கள் அந்த பெட்டியை எண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தற்காலிகமாக அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
