'அந்த வலி இருக்கே... அது எனக்கு மட்டும் தான் தெரியும்'!.. 'SQUAD-ல் இடம்பெற்ற அனைவருக்கும் வாய்ப்பு'!?.. டிராவிட் மாஸ்டர் ப்ளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jun 11, 2021 06:14 PM

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் டிராவிட் வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பு அளிப்பதைப் பற்றி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

as a team coach made sure every player got a game dravid

இந்திய இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியை உருவாக்கி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய அணியின் கோச்சாக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ESPN Cricinfo இணையதளத்துக்கு பேசியுள்ள ராகுல் டிராவிட், "நான் வீரர்களிடையே நேரடியாகவே சொல்லிவிடுவேன். கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு என்னுடன் வந்தால் விளையாட வாய்ப்பு அளிக்காமல் திரும்ப அழைத்து வரமாட்டேன். ஒரு சுற்றுப் பயணத்துக்கு சென்றுவிட்டு விளையாடமல் திரும்பி வருவது எத்தகைய கொடுமையான விஷயம் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நானும் அதுபோல இருந்திருக்கிறேன். உள்நாட்டில் 700-800 ரன்களை குவித்துவிட்டு வெளிநாட்டில் விளையாடாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தால் ஒருவரின் திறமை எப்படி தெரியும்? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஆனால், ஒருமுறை நீங்கள் சிறப்பாக விளையாடிவிட்டு தேர்வாளர்கள் கவனத்துக்கு வந்துவிட்டால், அடுத்த சீசனிலும் 800 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழும். அதனை செய்வது எளிதான காரியமல்ல, பின்பு உங்களுக்கு உறுதியாக வாய்ப்பு கிடைக்குமா என்றும் தெரியாது.

அதனால் 15 பேருடன் சுற்றுப் பயணம் சென்றால் எதிரில் இருக்கும் அணி எப்படியாக இருந்தாலும் சுழற்சி முறையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவேன். சில Under 19 போட்டிகளில் 5 முதல் 6 மாற்றங்கள் வரை செய்வேன்" என்றார் ராகுல் டிராவிட்.

தொடர்ந்து பேசிய டிராவிட், "கடற்கைரையிலோ அல்லது சாலையிலோ விளையாடுவது உங்களை ஒரு முழு கிரிக்கெட் வீரராக்காது. இந்த விளையாட்டை காதலிப்பவர்கள் முறையான கிரிக்கெட் மேட்களிலும், பிட்ச்களிலுமே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அப்படி விளையாட்டை நேசிப்பவர்களுக்கு நல்ல மேட்டையும், பிட்சையும் உருவாக்கி தர வேண்டும். சரியான பயிற்களை கொடுக்க வேண்டும், அந்தப் பயிற்சியாளருக்கு உடற்பயிற்சியும் தெரிந்திருக்க வேண்டும். அரை குறையாக அனைத்திலும் இருந்தால் நல்ல வீரர்களை உருவாக்க முடியாது" என்றார்.

இறுதியாக பேசிய டிராவிட், "எங்களுடைய காலத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. ஆனால், எங்களுக்கு தேடுதலும், அறிவுப் பசியும் அதிகம் இருந்தது. உடற் தகுதிக்கு கூட நாங்கள் ஆஸ்திரேலியர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களை பார்ப்போம். அவர்களுக்கு உடற்தகுதி பயிற்சியாளர்கள் இருந்தார்கள். ஆனால், எங்களுக்கு அப்படி ஏதும் கிடைக்கவில்லை. எங்களுக்கு சொல்லப்பட்டதெல்லாம் உடற்பயிற்சி கூடத்தில் அதிக நேரம் செலவிடாதே, அது உடம்பை இறுக்கி விடும். அதனால் பவுலிங் போடுவதும், ஓடவதும் மட்டுமே தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. As a team coach made sure every player got a game dravid | Sports News.