Radhe Others USA
ET Others

"மேலிட உத்தரவுக்கு வெயிட் பண்ணாம உடனடியா ஆக்ஷன் எடுங்க".. போலீஸ் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 11, 2022 03:45 PM

சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் மேலிட உத்தரவுக்கு காத்திருக்காமல் காவல்துறை கண்காணிப்பாளர்களே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Take immediate action in law and order problems, says Mk Stalin

"தப்பு கணக்கு போட்டுட்டீங்க".. புது குண்டை தூக்கிப்போட்ட புதின்.. பரபரப்பில் உலக நாடுகள்..!

கூட்டம்

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் மற்றும் வனத் துறை அதிகாரிகளின் மாநாடு இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," தமிழகத்துக்கு புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் இருப்பது அவசியம். மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள்மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றங்கள் குறைந்த வாழ்க்கை முறையை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும்" என்றார்.

மேலும் அவர்," வரும் முன் காப்போம் என்பதை சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் கடைபிடித்து குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்க வேண்டும்" என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

அதேபோல, "சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அமைதியை நிலைநாட்ட மேலிட உத்தவுக்காக காத்திராமல் உடனடியாக சட்டத்திற்கு உட்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.

Take immediate action in law and order problems, says Mk Stalin

பாராட்டு

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளை பாராட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், சிறப்பான முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கி ஸ்டாலின் கவுரவப்படுத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உடனான கூட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மதுரை மாநகரக் காவல் ஆணையருக்கும் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

நம்பிக்கை

காவல்துறை அதிகாரிகளுக்கு விருதளித்த பின்னர்," அடுத்த வருடம் இந்த விருதை தாங்களும் பெற வேண்டும் எனக் காவல்துறையில் உள்ள அனைவரும் பாடுபடுவர்கள் என நான் நம்புகிறேன்" என அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

"உக்ரைன்-ல அந்த குண்டை யூஸ் பண்ணோம்னு ரஷ்யா கன்ஃபர்ம் பண்ணிடுச்சு ".. பிரிட்டன் பாதுகாப்புத்துறை போட்ட பரபரப்பு ட்வீட்..!

Tags : #IMMEDIATE ACTION #MK STALIN #TAMILNADU CM MK STALIN #முதல்வர் ஸ்டாலின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Take immediate action in law and order problems, says Mk Stalin | Tamil Nadu News.