"உக்ரைன்-ல அந்த குண்டை யூஸ் பண்ணோம்னு ரஷ்யா கன்ஃபர்ம் பண்ணிடுச்சு ".. பிரிட்டன் பாதுகாப்புத்துறை போட்ட பரபரப்பு ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது வேக்கம் குண்டுகளை உபயோகித்ததாக ரஷ்ய பாதுகாப்பு துறை உறுதி செய்துள்ளது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட் செய்திருப்பது பலரையும் அச்சம் அடைய வைத்து இருக்கிறது.

உலகின் நீளமான கார்.. கின்னஸ் ரெக்கார்டு படைத்த இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?..
வேக்கம் பாம்
ரஷ்யாவின் ஆயுதங்களில் (அணு ஆயுதங்கள் தவிர்த்து) மிக மோசமானவற்றுள் ஒன்றாக கருதப்படும் இந்த vacuum bomb பேரழிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இதன் காரணமாகவே "ரஷ்ய பாம்களின் தந்தை" என இந்த வகை குண்டுகள் அழைக்கப்படுகின்றன. வழக்கமாக தெர்மோபாரிக் ராக்கெட்டுகள் மூலமாக குறிப்பிட்ட இடத்திற்கு இந்த vacuum bomb வீசப்படும்.
தாக்கம்
சுமார் 600 மீட்டர் விட்டத்திற்கு இந்த வகை குண்டுகள் தாக்கத்தினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. ஒரு vacuum bomb ஏற்படுத்தும் அழிவு 44 டன் TNTஏற்படுத்தும் அழிவிற்கு சமம் என்கிறார்கள் ஆயுத நிபுணர்கள்.
இவை எந்த இடத்தில் வெடிக்க வைக்கப்படுகிறதோ அங்குள்ள ஆக்சிஜனை துரிதமாக வெளியேற்றிவிடும். இதனால் நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, மனிதர்களின் உள் உறுப்புகளை மிக மோசமாக சேதப்படுத்தும் எனவும் இதனால் மனிதர்களின் செவிப் பறை மோசமாக சிதைவடையும் என எச்சரித்து இருக்கிறது அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ.
ட்வீட்
இந்த மோசமான வேக்கம் குண்டுகளை உக்ரைன் நாட்டில் உபயோகித்ததாக உலக நாடுகள் ரஷ்யா மீது குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட ட்வீட்டில்," உக்ரைனில் TOS-1A ஆயுதத்தை பயன்படுத்துவதை ரஷ்ய ராணுவ அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த TOS-1A ஆயுதம் அதிக சக்தியுடன் வெடித்து, மோசமான தீ ஜ்வாலைகளை உருவாக்கும் வல்லமை கொண்டவை" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமைச்சகத்தின் ட்வீட்டில் தாங்கள் உக்ரேனுக்கு உறுதுணையாக இருப்போம் எனப் பொருள்படும் வகையில் #StandWithUkraine என்னும் ஹேஷ்டாக்கையும் இணைத்துள்ளது.
உலக அளவில் பல அமைப்புகளால் தடை செய்யப்பட்ட இந்த வேக்கம் குண்டுகளை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்துவதாக அந்நாட்டு இராணுவமே உறுதி செய்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
"தப்பு கணக்கு போட்டுட்டீங்க".. புது குண்டை தூக்கிப்போட்ட புதின்.. பரபரப்பில் உலக நாடுகள்..!

மற்ற செய்திகள்
