"நாங்க அக்கா தம்பி மாதிரிதான்".. சர்ச்சையான ஆடியோ விவகாரம்.. சமாதானம் ஆன சூர்யா சிவா - டெய்சி ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி சூர்யா சிவா - டெய்சி இடையிலான ஆடியோ வெளியாகி வைரலாக பரவிய நிலையில் இருவரும் இனி சுமூகமாக பணிகளை தொடர இருப்பதாக கூட்டாக பேட்டி அளித்திருக்கின்றனர்.
![Surya Siva and Daisy interview amid conversation Audio viral Surya Siva and Daisy interview amid conversation Audio viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/surya-siva-and-daisy-interview-amid-conversation-audio-viral.jpg)
பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் குழு முன்பு ஆஜராகினர். இதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டெய்சி - சூர்யா சிவா இருவரும் மனமுவந்து சுமூகமாக பணிகளை தொடர இருப்பதாக தெரிவித்தனர். அப்போது பேசிய டெய்சி,"சூர்யா சிவா அவர்கள் வெகுகாலமாக என்னை அக்கா என்று தான் அழைப்பார். பெரிய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு இந்த கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளோம். ஆகவே இருவரும் இனி சுமூகமாக பணிகளை தொடர இருக்கிறோம்" என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய டெய்சி,"இந்த ஆடியோ விவகாரம் குறித்து கட்சியில் இருக்கும் பெரியவர்கள் குறிப்பாக கனகசபாபதி அவர்கள் முன்னிலையில் பேசினோம். இதன்மூலம், இந்த விஷயத்தில் இருந்து சுமூகமாக செல்வது என பரஸ்பரம் முடிவெடுத்திருக்கிறோம். இது யாருடைய வற்புறுத்தலும் இன்றி எடுக்கப்பட்ட முடிவு" என்றார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)