யூஸ் பண்ண முடியாத நிலையில் இருந்த பள்ளி கழிப்பறை.. வெறும்கையால் சுத்தம் செய்த அமைச்சர்.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் பள்ளியில் இருந்த கழிப்பறையை வெறும் கையால் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | வரதட்சணை விவகாரம்.. வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாரையால் பதில் சொன்ன மனைவி..!
சுத்தம்
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்பி ஜனார்தன் மிஸ்ரா, மத்தியப் பிரதேசத்தின் கட்காரியில் உள்ள பெண்கள் பள்ளியில் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் ரேவா தொகுதி எம்பியான மிஸ்ரா,பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய சேவா பக்கவாடா திட்டத்தின் அடிப்படையில் யுவ மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்த மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெண்கள் பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கே மரம் நடப்பட்ட பிறகு, பள்ளியில் உள்ள கழிவறை மிகவும் அசுத்தமாக இருப்பதை அறிந்த அவர் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அசுத்தமாக இருப்பதால் அந்த கழிவறையை யாரும் பயன்படுத்துவதில்லை என அங்கிருந்தவர்கள் கூறவே, உடனடியாக தண்ணீர் மற்றும் துடைப்பம் ஆகியவற்றை எடுத்துவரும்படி கூறியுள்ளார் மிஸ்ரா. இதனையடுத்து, பாதுகாப்பு உபகரணங்களோ, கை உறைகளோ அணியாமல் கழிப்பறையை மிஸ்ரா சுத்தம் செய்திருக்கிறார். இதனையடுத்து இந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மிஸ்ரா.
வீடியோ
அந்த பதிவில்,"கட்சி நடத்தும் சேவா பக்வாடாவின் கீழ், கத்காரி பெண்கள் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதன்பிறகு, பள்ளியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் அபியானின் தீவிர ஆதரவாளரான ஜனார்தன் மிஸ்ரா, பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்வது இது முதல் முறை அல்ல. பிப்ரவரி 2018 இல், அவர் தனது தொகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. முன்னதாக, அவர் தனது தொகுதியான ரேவாவின் தெருக்களையும் சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
पार्टी द्वारा चलाये जा रहे सेवा पखवाड़ा के तहत युवा मोर्चा के द्वारा बालिका विद्यालय खटखरी में वृक्षारोपण कार्यक्रम के उपरांत विद्यालय के शौचालय की सफाई की।@narendramodi @JPNadda @blsanthosh @ChouhanShivraj @vdsharmabjp @HitanandSharma pic.twitter.com/138VDOT0n0
— Janardan Mishra (@Janardan_BJP) September 22, 2022