"பொண்டாட்டி'ய கொன்னுட்டான்.." சிறையில் இருந்த கணவர்.. உயிருடன் திரும்பி வந்த மனைவி.. அங்க தான் ஒரு 'பயங்கர' ட்விஸ்ட்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | May 03, 2022 09:18 PM

பீகார் மாநிலம், மோதிஹரி மாவட்டத்தில் அமைந்துள்ள லட்சுமிபூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் ராம்.

bihar woman live with lover husband in jail for her murder

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சாந்தி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணமாகி சுமார் ஆறு ஆண்டுகளான நிலையில், கடந்த மாதம் திடீரென காணாமல் போயுள்ளார் சாந்தி தேவி.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது மகளைக் காண வேண்டி, தினேஷ் ராம் வீட்டிற்கு வந்துள்ளார் சாந்தி தேவியின் தந்தையான யோகேந்திர யாதவ்.

காணாமல் போன மகள்..

அப்போது மகள் அங்கே  இல்லை என்பதை அறிந்த யோகேந்திர யாதவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அது மட்டுமில்லாமல், மருமகன் தினேஷ் ராம் மீதும் போலீசில் புகார் ஒன்றை அவர் அளித்துள்ளார். இது பற்றி போலீசிடம் அவர் அளித்த புகாரில், "எனது மகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19 ஆம் தேதி, தினேஷ் ராமுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்படி இருக்கையில் எனது மகளைக் காணவில்லை என்பது எனக்கு தெரிய வந்தது.

கடந்த ஆண்டு, எனது மகளை வரதட்சணை கேட்டு தினேஷ் ராம் சித்ரவதை செய்திருந்தார். அது மட்டுமில்லாமல், மோட்டார் பைக் மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டும் மகளை அவர் கொடுமைப்படுத்தியுள்ளார்" என தனது புகாரில் யோகேந்திர யாதவ் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மத்தியில், சாந்தி தேவி இறந்து போய் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை

இது தொடர்பாக புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், தினேஷ் ராமை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இன்னொரு பக்கம், சாந்தியின் உடலை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கினர். இதற்காக, சாந்தி தேவி பயன்படுத்திய மொபைல் போன் எங்கு இருக்கிறது என்பதை கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

திரும்ப வந்த மனைவி

அப்போது, அந்த மொபைல் சிக்னல், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, ஜலந்தருக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்திய போது, சாந்தி தேவி உயிரோடு இருப்பதும் தெரிய வந்தது. அவர் வசித்து வந்த இடத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதே போல, தன்னுடைய காதலருடன் சாந்தி தேவி வாழ்ந்து வந்ததையும் போலீசார் தெரிந்து கொண்டனர்.

இதன் பின்னர், சாந்தி தேவியை பீகார் அழைத்து வந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், யோகேந்திர யாதவ் அளித்த புகாரில் உள்ள உண்மைத் தன்மை பற்றியும் போலீசார் கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மனைவியை கொலை செய்ததன் பெயரில், கணவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மனைவியே உயிருடன் இருந்து கொண்டு நாடகமாடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

Tags : #HUSBAND #WIFE #POLICE #மனைவி #கணவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bihar woman live with lover husband in jail for her murder | India News.