"என் மனைவி தான் என்னோட 'COACH'.. அவ சொல்றது எல்லாம் ஒண்ணு தான்.." பிரபல வீரர் சொன்னது இப்ப செம 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்திருந்தது.
இதன் பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த போட்டியில், வெற்றி பெற்று தொடர் தோல்வியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம்சன் 54 ரன்கள் எடுத்திருந்தார்.
அதிரடி காட்டிய ரிங்கு சிங்
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இருந்தாலும், நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்க்க, கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தது. 23 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்திருந்த ரிங்கு சிங், ஆட்ட நாயகன் விருதினை பெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திற்கு கொல்கத்தா அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் அணி வீரர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் ஆடி ரன் சேர்த்தது. இதனால், 130 ரன்கள் வரை தான் எடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஹெட்மயர் அடித்த அடி
ஆனால், கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி காட்டியதால், 150 ரன்களைத் தாண்டியது ராஜஸ்தான். 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். இதற்கு முந்தைய சில போட்டிகளிலும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி அணிக்காக ரன் சேர்த்து கொடுக்கவும் செய்துள்ளார் ஹெட்மயர்.
மனைவி தான் என் 'கோச்'
தனது இன்னிங்ஸ் குறித்து பேசிய ஹெட்மயர், "என்னுடைய முதல் இரண்டு வருடங்களில், நான் செட் ஆவதற்கான வாய்ப்புகளை கொடுத்ததில்லை. இந்த ஆண்டும், கடந்த ஆண்டும் பிட்ச் கண்டிஷன் அறிந்து ஆட வேண்டும் என எனக்குள் நானே கூறிக் கொண்டேன். என்னுடைய மனைவி, எனது பயிற்சியாளராகவும், எனது கடுமையான விமர்சகராகவும் இருந்துள்ளார். முதல் இரண்டு பந்துகளை கணித்து அதன் பிறகு, எப்படி ஆட வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் என்னிடம் அறிவுறுத்தினார்" என தெரிவித்துள்ளார்.
அதே போல, ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்கூப் ஷாட்களை, ராஜஸ்தான் அணியிலுள்ள சக வீரர் ஜோஸ் பட்லரிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆசைப்படுவதாகவும் ஹெட்மயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8