செங்குத்தாக தரையிறங்கிய விமானம்.. கடைசி வினாடியில் தப்பிச்ச பைலட்.. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Dec 16, 2022 08:28 PM

அமெரிக்காவில் போர் விமானம் ஒன்று செங்குத்தாக தரையிங்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானி பாராசூட் மூலமாக அதிலிருந்து உயிர் பிழைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Fighter jet vertical landing in Texas Naval Base Video goes viral

Also Read | ரொனால்டோவை விளையாட அனுமதிக்காத பயிற்சியாளர்.. அணி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..! FIFA2022

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் F-35B ராணுவ விமானம் ஒன்று வெர்டிகல் லேண்டிங் எனப்படும் செங்குத்தான முறையில் தரையிறங்கி உள்ளது. பின்னர் உடனடியாக அதில் இருந்து விமானி பாராசூட் மூலமாக வெளியே வந்திருக்கிறார். இந்த வீடியோ உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்படும் Lockheed Martin F-35B Lightning II ஜெட் விமானம் டிராக்கின் மேலே பறந்து சென்றிருக்கிறது. அப்போது, அந்த விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்திருக்கிறார். ஹெலிகாப்டர் போல, நேரடியாக தரையில் விமானம் தரையிறங்க அதனால் அழுத்தம் பெற்று மேலே எகிறுகிறது. பின்னர். விமானத்தின் முன்பகுதி தரையில் மோதுகிறது. இதனிடையே, சூழ்நிலையை உணர்ந்த அந்த விமானி பாதுகாப்பு பாராசூட் மூலமாக விமானத்தில் இருந்து வெளியே வருகிறார்.

Fighter jet vertical landing in Texas Naval Base Video goes viral

பின்னர் சிறிது நேரத்தில் மீட்புப் படையினர் அந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். இதனையடுத்து அந்த விமானி காயங்கள் ஏதுமின்றி மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அப்பகுதி போலீசார் இதுப்பற்றி பேசுகையில்,"இந்த சம்பவம் காலை 10.15 மணிக்கு நடைபெற்றது. ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்கியது. விமானி பாராசூட் மூலமாக விமானத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

Fighter jet vertical landing in Texas Naval Base Video goes viral

இந்நிலையில், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விபத்து பற்றிய விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். F-35B போர் விமானத்தை தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின், இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், போர் விமானம் ஓடுதளத்தில் மோதிய நிலையில் விமானி அதிலிருந்து தப்பித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | இதுக்குதாங்க அவரை கொண்டாடுறாங்க.. புஜாரா சதம் அடிச்சப்போ கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ..!

Tags : #FIGHTER JET #FIGHTER JET VERTICAL LANDING IN TEXAS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fighter jet vertical landing in Texas Naval Base Video goes viral | World News.