'மதுரையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு...' எந்த தேதி வரை...? - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டத்தில் மட்டும் முழு ஊரடங்கு வரும் ஜூலை 12 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை 5 மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் மட்டும் மேலும் 7 நாட்கள் (வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை) நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்க்ய் காரணம் மதுரையில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையே ஆகும்.
இதுவரை மதுரையில் மட்டும் கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது அதில் 51 பேர் உயிரிழந்ததாகவும் 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்படைந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும், முழு ஊரடங்கு காலத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
