'கட்டி போட்டு, காதுல பூச்சி மருந்து ஊற்றி கொலை...' 'குடிச்சிட்டு டிஸ்டர்ப் பண்ணிருக்காப்புல...' மனைவி, மகன், அம்மா 3 பேரும் சேர்ந்து தீத்துக் கட்டிட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூரில் குடித்துவிட்டு தொல்லை செய்த நபரை குடும்பமே சேர்ந்து காதில் பூச்சு மருந்து ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவெளியில் தன் தாய் மற்றும் மனைவி சுகுணா மகன் ரவிவர்மன் உடன் வசித்து வருகிறார் ராஜசேகர். ராஜசேகரின் மனைவி சுகுணா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ராஜசேகரின் தந்தை வருமானவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இறந்த பின் கிடைக்கும் ஓய்வூதியத்தைக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார் ராஜசேகர்.
இந்நிலையில் பணிக்கு ஏதும் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜசேகர் அடிக்கடி மனைவி மற்றும் தாயை வற்புறுத்தி, அடித்து கொடுமை செய்து கையில் இருக்கும் பணத்தை பிடுங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தும் குடித்துவிட்டு அக்கம்பக்கத்தினரை தொல்லை செய்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜசேகர் நேற்று தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியதாக அவரின் மனைவி மற்றும் தாய் செல்வி இருவரும் மகன் ரவிவர்மனிடம் இதைக்கூறி அழுதுள்ளனர். இதன் காரணமாக இனி வேறு வழியில்லை, அவரை கொலை செய்தாக வேண்டும் என மனைவி, அம்மாவுடன் மகனும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர்.
தாய் செல்வி, மனைவி சுகுணா மற்றும் மகன் ரவிவர்மன் ராஜசேகரை கட்டிப்போட்டு கத்திரிக்காய் பயிருக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை காதில் ஊற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் அறிந்து கொலை நடந்த இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் ராஜசேகரின் தாய், மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தில் இருக்கும் தாய் மனைவி மகன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
