'நாம சேர்ந்து வாழலாம், என் கூட வா...' 'இல்ல, நான் வரல...' 'ஆத்திரத்தில் வெறியான டிக்டாக் பிரபல இளைஞர்...' 'சந்தையில வச்சு...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடும்பத்துடன் மார்கெட்டிற்கு சென்ற பெண்ணை டிக்டாக் பிரபலமான ஒரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விவேக் விஹார் காலனியில் வசித்து வரும் 19 வயதான நைனா என்ற பெண் தன் பெற்றோரோடு ஜூன் மாதம் 17ம் தேதி அன்று, திலா மோரில் ஒரு சந்தைக்குச் சென்றுள்ளார். தீடீரென அங்கு வந்த நான்கைந்து மர்ம நபர்கள் நைனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றி போய் அங்கு வந்த மர்மநபர்கள் நைனாவை பல முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் பொதுமக்களுக்கு இடையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, ஜூன் 21 ஆம் தேதி டிக் டோக் நட்சத்திரமான ஷெரு கான் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், டெல்லியை சேர்ந்த 23 வயதான ஷெரு கான்னுக்கும், 19 வயதான நைனாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது நைனாவிற்கு வீட்டில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதால், அதனை அறிந்த ஷெருவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நைனாவுடன் சேர்ந்து வாழ தன்னுடன் அழைத்து செல்லவே மார்கெட்டிற்கு வந்ததாகவும், நைனா அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் அவரை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளனர் என்று சாஹிபாபாத்தின் வட்ட அலுவலர் கேசவ் குமார் கூறினார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நைனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
