தங்கை 'மிஸ் சென்னை'... அக்கா 'மிஸ் இந்தியா'... அழகு தேவதைகளை பெற்ற தந்தை 'பெருமிதம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுடெல்லியில் நடைபெற்ற அழகிப் போட்டியில் சென்னை கல்லூரி மாணவி மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லியில் கடந்த 5 நாள்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஆசியா போட்டி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து சென்னையை சேர்ந்த மாணவி பாஷினி பாத்திமா உட்பட 3 பேர் பங்கேற்றனர். நீச்சல், நடனம், திறனறிவு, உடல் தகுதி, யோகா என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி சுற்றில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பாஷினி பாத்திமா 2020-ம் வருடத்திற்கான `குளோபல் மிஸ் இந்தியா ஆசியா அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழக பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
பாஷினி பாத்திமாவின் தந்தை ஜெ.எம்.பஷீர் கூறுகையில், "என்னுடைய இரண்டு மகள்களும் மாடலிங் துறையில் உள்ளனர். மிஸ் சென்னை போட்டியில் என்னுடைய இரண்டாவது மகள் பங்கேற்று மிஸ் சென்னை பட்டத்தை வென்றாள். தற்போது என் மூத்த மகள் பாஷினி பாத்திமா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்'' என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
