கசிந்த ரஷ்யாவின் அடுத்த ப்ளான்.. கெடைக்கிற வண்டியை புடிச்சு உடனே அங்கிருந்து வெளியேறுங்க.. இந்திய தூதரகம் பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே 7-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. தற்போது தலைநகர் கீவ்-வை (Kyiv) நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது. அதனால் உக்ரைன் நாடும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை தோல்வி
இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. கடந்த திங்கட்கிழமை இரு தரப்பிற்கும் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போது முடிவுகள் ஏதும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் மூன்றாம் உலகப்போர் ஏற்பட நேர்ந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது.
கசிந்த ரஷ்யாவின் ப்ளான்
இந்த நிலையில் ரஷ்யா தாக்குதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தலைநகரைக் கைப்பற்றலாம் என்ற நோக்கில் தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. அதனால் இன்று இரவு நவீன போர் விமானங்களைக் கொண்டு உக்ரைனை தாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளது.
இந்தியத் தூதரகம்
இந்த சூழலில் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘மோசமடைந்து வரும் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கார்கிவ் நகரை விட்டு உடனே வெளியேற வேண்டும். ரயில் அல்லது கிடைக்கும் வாகங்களில் உடனடியாக வெளியேறிச் செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளது.
மாணவர் உயிரிழப்பு
உக்ரைனின் கீவ் நகரில் நேற்று முன்தினம் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
