யாருப்பா இந்த பையன்..? அறிமுக போட்டியிலேயே ‘இரட்டை சதம்’.. திரும்பிப் பார்க்க வைத்த இளம் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசி இளம் வீரர் அசத்தியுள்ளார்.
Also Read | விபரீதம்.! பாத்ரூமில் வாட்டர் ஹீட்டரை ON செய்த இளைஞர்.. திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்.!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, உத்தரகாண்ட் அணியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரராக களமிறங்கிய சுவேத் பார்கர் 104 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 69 ரன்களுடனும் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 267 ரன் குவித்தது. சர்பராஸ் 153 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனை அடுத்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுவேத் பார்கர் 252 ரன்கள் (447 பந்து, 21 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அசத்தினார். இதன் மூலம் ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை 21 வயதான சுவேத் பார்கர் பெற்றார்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கி அதிக ரன் எடுத்த வீரர்களின் வரிசையில் பீகாரை சேர்ந்த சகிபுல் கனி 341 ரன்களுடன் முதலிடத்திலும், 2-வது இடத்தில் அஜய் ரோஹரா (267*), 3-வது இடத்தில் அமோல் முஸும்தார் (260), 4-வது இடத்தில் பஹிர் ஷா (256*) ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.