"குப்பைத் தொட்டியில் கிடந்த லாக்கர்.." உள்ள என்ன இருந்துச்சு தெரியுமா..? மதுரையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | உலகின் மிகப்பெரிய மது பாட்டில்.. ஏலத்துல போட்டிபோட்ட கோடீஸ்வரர்கள்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?
மதுரை ஜவஹர்புரம் அருகே உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டியை சுத்தம் செய்ய வழக்கம்போல தூய்மை பணியாளர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது குப்பைத் தொட்டியினுள் ஏதோ பெரிதாக கிடப்பதை பார்த்த அவர் நெருங்கி சென்றபின்னரே அது ஒரு லாக்கர் என்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு அந்த தூய்மை பணியாளர் தகவல் கொடுத்திருக்கிறார்.
அதிர்ச்சி
இதனிடையே சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் இயங்கிவரும் அடகுக்கடை ஒன்றில் லாக்கர் கானாமல் போனதாக உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் ஜவஹர்புரம் பகுதியில் அடகுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை என்பதால், இன்று கடையை திறக்க சென்றிருக்கிறார் வைத்தியநாதன். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனை தொடர்ந்து கடைக்குள் விரைந்துசென்ற வைத்தியநாதன், உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கரை காணாததால் திடுக்கிட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் வைத்தியநாதன். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டிருந்த வேளையில் தான், அதே பகுதியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, காணாமல்போன வைத்தியநாதனின் லாக்கர் தான் அது என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளே இருந்த பணம் மற்றும் நகை
காணாமல் போன லாக்கருக்குள் அரைகிலோ தங்கம் மற்றும் 21 ஆயிரம் பணம் இருந்ததாக கூறிய போலீசார், லாக்கரை உடைக்க முடியாததால் திருடர்கள் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் திருடர்களை பிடிபடுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடித்த லாக்கரை, திறக்க முடியாததால் லாக்கரை திருடர்கள் குப்பையில் வீசிச்சென்ற சம்பவம் மதுரை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | அப்படிப்போடு .. இனி பேருந்துகளில் Gpay மூலம் இ-டிக்கெட்.. தமிழக அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..முழுவிபரம்.!