திடீர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து.. இன்று திறக்கப்பட உள்ள ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வெளியான அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை செம்பரம்பாக்கம் ஏரி இன்று பிற்பகல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை எட்டி உள்ளதால், முதற்கட்டமாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வரும் புழல் ஏரியில் இருந்தும் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
