‘தலைக்கு தில்ல பாத்தியா’!.. சோப்பு போட்டு ஆனந்த குளியல்.. விட்டா ‘உள்நீச்சல்’ அடிப்பாரு போல.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடர் மழை காரணமாக சாலையில் வெள்ளமாக ஓடிய தண்ணீரில் ஒருவர் சோப்பு போட்டு குளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில் செம்பேரி, பெண்ணாடம், கோனூர், தொளார், மோலூர், திட்டக்குடி, நெடுங்குளம், மங்களூர், அடரி, தீவளூர், சாத்துக்கூடல் உள்ளிட்ட 10-க்கும் பகுதிகளில் மேற்பட்ட தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழையால் கடலூர் மாவட்டத்தில் பல ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் தண்ணீர் முட்டளவுக்கு தேங்கி நிற்கின்றன. இந்த நிலையில் சாலையில் வெள்ளமாக ஓடிய தண்ணீரில் ஒருவர் ஆனந்த குளியல் போட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரம் பேருந்து நிலையம் முன்பு மழை நீர் ஆறு போல ஓடுகிறது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தண்ணீர் மூழ்கி குளித்ததோடு, உடலுக்கு சோப்பு போட்டு குளித்துள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
