Udanprape others

பதுங்கி இருக்கு, எப்படியாவது புடிச்சே ஆகணும்...! கரெக்ட்டா 'புலி' சிக்க போற நேரம் பார்த்து, திடீர்னு... - T-23 புலியின் 'வேற லெவல்' தந்திரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Oct 15, 2021 01:33 PM

முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வாழும் புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடையை இந்த T-23 புலி. அந்தப் புலி மசினக்குடியில் கெளரி என்ற பெண்மணியை கடந்த வருடம் அடித்துக் கொன்றது.

nilgiris forest The T-23 tiger escaped after two injections.

பின்னர் அங்கிருந்து கூடலூர் அருகே இருக்கும் தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்து கொன்றது. இதை தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடை விலங்குகளையும் அடித்து கொன்றது.

nilgiris forest The T-23 tiger escaped after two injections.

இந்த நிலையில் ஆட்கொலி புலி மசினகுடிக்கு அருகில் இருக்கும் சிங்காரா வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசுவன் என்னும் நபரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொன்றது.

இதனையடுத்து, புலியை உடனடியாக சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை முடிவெடுத்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

nilgiris forest The T-23 tiger escaped after two injections.

இந்த நிலையில், அந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பல நாட்களாக விடாமல் தொடர்ந்து போரடி வருகின்றனர். ஆனால், அந்தப் புலி வனத்துறையினருக்கு டிமிக்கி காட்டி வருகிறது.

நேற்று முன்தினம் (13-10-2021) புலியின் மீது மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் புலி அடர்ந்த புதருக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. வெளிச்சம் இல்லாத காரணத்தினால் தேடுதல் தடைப்பட்டது.

nilgiris forest The T-23 tiger escaped after two injections.

இதனைத் தொடர்ந்து, புலியின் நடமாட்டம் குறித்து போஸ்பரா, நம்பிகுன்னு, மண்வயல் மற்றும் கார்குடி போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், தற்போது போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

nilgiris forest The T-23 tiger escaped after two injections.

தொடர்ந்து விடாமல் 21 நாள்களாக தேடப்பட்டுவந்த புலி, நேற்று (14-10-2021) இரவு மசினகுடி - முதுமலை சாலையில் நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழுவினர் நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தினர். அதில், இரண்டு ஊசிகள் T-23 உடம்பில் செலுத்தப்பட்ட நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் மயங்கிய நிலையில் தப்பித்தது.

மயக்கநிலையில் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற புலியை நூற்றுக்கு மேற்பட்ட வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் வலைவீசி தேடி வருகின்றனர். புலி சீக்கிரம் சிக்கிவிடும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nilgiris forest The T-23 tiger escaped after two injections. | Tamil Nadu News.