NEEYA NAANA : அம்மா பேச்சை கேட்டு இயங்கும் மனைவிகள்.? பேசுனதை கேட்டு நிகழ்ச்சியை விட்டே கிளம்ப முடிவெடுத்த கோபி 😂

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 05, 2023 02:12 PM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

Neeya Naana New episode gobinath fun decision after debate

                                                      Image Credit : Vijay Television

இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும்.

மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும். இந்த நிலையில், தற்போது நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த விஷயம் தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார டாபிக்கில் ஒரு பக்கம் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு செயல்படும் பெண்களும், இன்னொரு பக்கம் அந்த பெண்களின் கணவர்களும் அமர்ந்துள்ளனர். அப்போது பல்வேறு விஷயங்களையும் கோபிநாத் இரு தரப்பினரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். அதே போல, தனது தாயுடன் இணைந்து மனைவி தன்னிடம் அணியும் உடைகளில் சிலவற்றையும் எதிர்பார்ப்பதாக கணவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

Neeya Naana New episode gopinath fun decision after debate

Image Credit : Vijay Television

"நான் ஒரு ஷர்ட் போட்டு இருக்கேன், அப்புறம் ரெண்டு பேரும் பேசுவாங்க, வருவாங்க. இது வேணாம் இது போட்டுக்கோன்னு சொல்லுவாங்க" என தனது மனைவி மற்றும் மாமியார் இணைந்து முடிவு எடுப்பதாக கணவர் தெரிவிக்கிறார். இதற்கு பதில் சொல்லும் அந்த மனைவி, "இப்ப நம்ம வீட்ல இருக்கேன்னா எல்லாரோட ஒப்பீனியனும் முக்கியமில்ல சார்" என கூறியதுமே அந்த பெண்ணிடம் கேள்வி கேட்கும் கோபிநாத், "நீங்க பிடிச்ச மாதிரி ஒரு டிரஸ் பண்ணி ஒரு கல்யாணத்துக்காக ரெடியா இருக்கீங்க. உங்க கணவர் ஒண்ணுமே சொல்லல, ஆனா உங்க மாமியார் அப்படியே கிராஸ் பண்ற போது உங்க புடவையை பார்த்துட்டாங்க. முகூர்த்தத்துக்கு எடுத்த பச்சை கலர் புடவையை கட்ட சொல்லுன்னு சொல்லிட்டாங்க. நீங்க அந்த மாதிரி மாத்தி கட்டிப்பீங்களா?" என கேட்கிறார்.

Neeya Naana New episode gopinath fun decision after debate

Image Credit : Vijay Television

இதற்கு பதில் சொல்லும் அந்தப் பெண், "இல்ல சார் நம்ம அதுக்காக எல்லாம் பிளான் பண்ணி முன்னாடியே ரெடி பண்ணி தைச்சு வச்சிருக்கோம். திடீர்ன்னு அவங்க சொல்றாங்களேன்னு எப்படி சார் மாற்ற முடியும்?" என தெரிவிக்கிறார்.

இதனை கேட்டதுமே, "அது எப்படிங்க கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம பேசுறீங்க. அப்புறம் அவங்க மட்டும் ஏன் அதை செய்யணும்" என்றதும், "அவங்க ஒரு உரிமைல சொல்றாங்க" என அந்த பெண் கூற, "உங்க மாமியாரும் அதே மாதிரி தானே சொல்றாங்க. அது தப்புன்னா அப்ப இது மட்டும் எப்படி சரி?. நான் விலகிக்கிறேன் டா. என்னால முடியாதுடா" என்கிறார் கோபிநாத்.

Neeya Naana New episode gopinath fun decision after debate

Image Credit : Vijay Television

இதே போல மற்ற சில பெண்களும் தாங்கள் எதிர்பார்ப்பது சரியானது என்றும் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது சரியில்லை என்றும் குறிப்பிட கடைசியில் பேசும் கோபிநாத், "நான் ரிட்டயர் ஆகிறேன். என்னால முடியல" என கூறிக்கொண்டு அப்படியே சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்புவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

 

 

Tags : #GOPINATH #NEEYA NAANA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Neeya Naana New episode gobinath fun decision after debate | Tamil Nadu News.