'சங்கி, பி டீம்-னு சொல்றவங்களோட நோக்கம் அது தான்...' நான் 'அவருக்கு' மட்டும் தான் பி டீம்...! - கமல்ஹாசன் கருத்து...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 07, 2020 03:07 PM

மக்கள் நீதி மையம் என்ற கட்சி தொடங்கி அரசியலில் குதித்த கமல், 'காந்திக்குத்தான் நான் பி டீம்' என காரசார கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Kamal retaliates against who call themselves sangi, B Team

கலையுலகின் ஜாம்பவான் என கூறப்படும் திரு.கமலஹாசன் அவர்கள் கடந்த வருடம் மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி சென்ற வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று களம் கண்டார்.

கமல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து, கமலஹாசனை அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் அவரை பாஜகவின் ஏ டிம், சங்கி, திமுக அடிமை என மாற்றி மாற்றி கூறிவந்தனர்.

இந்நிலையில் தற்போது திரு.கமல்ஹாசன் அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுக்கும் விதத்தில், 'அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்' எனப் பதிவிட்டு திமுக மற்றும் அ.தி.மு.க கட்சிக்கு ஒரே பதிலை கொடுத்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamal retaliates against who call themselves sangi, B Team | Tamil Nadu News.