"தோனியின் பயணத்தில் நானும் இணைகிறேன்"!.. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா!.. கடைசியா அவர் சொன்னது 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் தோனி இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில், "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி. இன்று (ஆகஸ்ட் 15) மாலை 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்" என பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.
இதனையடுத்து, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில், "உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்" என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
