'குக்கரில் சாராயம் காய்ச்சிய அம்மா...' 'பசங்களோட சேர்ந்து காய்ச்சிருக்காங்க...' 3 பேரும் குக்கரை போட்டுட்டு தெறிச்சிட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயே மகன்களுக்கு குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் மதுபான கடைகளும் முழு அடைப்பில் உள்ளது. இதனால் விரக்தியடையும் குடிமகன்கள் சிலர் பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை அதிக விலைக்கு விற்றுவருகின்றனர்.
ஒரு சிலர் அதற்கும் ஒரு படி மேலே போய் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்று போலீசாரிடம் தர்ம அடி வாங்கும் நிலையும் காணப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயே மகன்களுக்கு வீட்டில் சாராயம் காய்ச்சி கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கிராமத்தில் மனைவி விமலா மற்றும் தனது இருமகன்களுடன் வசித்து வருகிறார் சந்திரசேகர். சமீபகாலமாக இவர்களின் நடத்தையில் சந்தேகமுற்ற அக்கம்பக்கத்தினர் இவர்கள் ஏதோ சட்ட விரோத செயலில் ஈடுபடுவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அவர்களுடைய வீட்டில் சுமார் 30 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சி கேன்களில் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. மேலும் சாராயம் காய்ச்சப்பட்ட குக்கர் மற்றும் இன்னப்பிற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் சந்திர சேகரின் மனைவியே அவர்களது மகன்களுக்காக குக்கரில் சாராயம் காய்ச்சி தந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் வருவதை அறிந்து, வீட்டில் காய்ச்சிய சாராயத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிய தாய் மற்றும் இருமகன்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
பெற்ற தாயே தன் மகன்களுக்கு குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
