5000 ரூபாய்க்கு.. 'பிரீபெய்ட்' கார்டு முறையில்.. 'மது' பாட்டில்கள் விற்பனையா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 10, 2019 11:14 PM

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆந்திராவில் புதிய திட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பிரீபெய்ட் முறையில் மது பாட்டில்களை அவர் தலைமையிலான அரசு விநியோகம் செய்ய, திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Fake liquor card of Andhra Pradesh goes viral on social media

இதுதொடர்பான கார்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் 25 வயது நிரம்பியவர்கள் 5000 ரூபாய் பணம் கட்டி இந்த கார்டை வாங்கிக்கொள்ளலாம் என்றும், பணம் முடிந்த விட்டால் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் இது தவறான தகவல் என ஆந்திர ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் மது விற்பனையை கட்டுப்படுத்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : #ALCOHOL