அப்போ உள்ள போற 'தண்ணி' எல்லாம் எங்க போகுது...? 'இப்படி' ஒரு கிணறா...? - ஆச்சரியத்தில் பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரு மழையினால் பெருக்கேடுத்து ஓடும் வெள்ளம் கிணறுக்கு செல்வதினால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
ஆனால், எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பவே செய்யாத அந்த அதிசய கிணறுகளைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள நம்பியாறு அணை வரலாறு காணாத மழையினால் நிரம்பியுள்ளது. அதனால் அணையின் இடது, வலதுபுற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது.
இடப்பக்க கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் ஆயன்குளம் பகுதியில் தண்ணீர் வந்து நிரம்பியது. தொடர்ந்து உபரி நீரானது ஆனைக்குடி படுகைக்கும், அதனை சுற்றியுள்ள உள்ள இரண்டு கிணறுகளுக்குள்ளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல மாதங்களாக கிணற்றினுள் தண்ணீர் சென்றாலும் எப்போதுமே கிணறுகள் நிரம்பியதில்லை. அப்போது உள்ளே செல்லும் தண்ணீர் எங்கே செல்கிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளது.
இந்த கிணறுகளுக்கு தண்ணீர் செல்வதின் மூலம் அந்த பகுதியை சுற்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். ஆனால், எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அந்த அதிசய கிணறுகள் தான் அப்பகுதி மக்களின் பேசுபொருளாக உள்ளது.
இந்த தகவலை அறிந்த சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அந்த இரு கிணறுகளையும் சென்று பார்வையிட்டு உள்ளார்.