VIDEO: 'கடையின் திறப்பு விழாவிற்கு...' 'குக் வித் கோமாளி' புகழ் வறாருன்னு தெரிஞ்சதுமே கட்டுக்கடங்காத கூட்டம்...! - புகழ் கிளம்பியதற்கு பின் கடை ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்பிரிங் முடியுடன் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமடைந்தார். தற்போது ஒருசில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருநெல்வேலியில் புதிதாக மொபைல் உதிரி பாகங்கள் விற்கும் கடையின் திறப்பு விழாவுக்கு 'குக் வித் கோமாளி' புகழ் வருவதாக அந்த கடையின் உரிமையாளர் நாதர்ஷா விளம்பரம் செய்தார். புகழ் வருகிறார் என்றதுமே கூட்டம் அலைமோதியது . கடையை திறந்து விட்டு, சமீபத்தில் வாங்கிய புதிய காரில் ஏறி கிளம்ப தயாரானபோது செல்ஃபி எடுக்க சிறிதும் இடைவெளியின்றி மக்கள் அவரை சூழ்ந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடனடியாக கூட்டத்தை அப்புறப்படுத்தினர், இதனால் நடிகர் புகழும் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்
நடந்த சம்பவத்தை அறிந்த உடன், புதிய கடைக்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா விதிமுறையை மீறியதாகவும், புதிய கடை திறப்பு விழாவில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி திறந்த அன்றே கடையை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.
பணம் செலவழித்து தனது கடையை திறக்க நடிகரை அழைத்து வந்த உரிமையாளர் நாதர்ஷா மாநகராட்சிக்கு அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளானார்.
Tirunelveli fans 🔥🔥 pic.twitter.com/yJ0EJ3HmYj
— Pugazh (@pugazh_iam) April 14, 2021

மற்ற செய்திகள்
