விஜய்யின் 'மாஸ்டர்' படம் வெளியாகவிருக்கும் நிலையில்... திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையில் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என தலைமைச் செயலா் கடந்த திங்கள் கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு மருத்துவ நிபுணா் குழுவினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசின் இந்த முடிவை மத்திய அரசும் எதிர்த்தது.
வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளின் இருக்கைகளை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்திக் கொள்ளும் உத்தரவை தமிழக அரசு கடந்த 4-ஆம் தேதியன்று பிறப்பித்துள்ளது.
இது, திரையரங்கு தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுகளை நீா்த்துப் போகச் செய்யும் செயலாக அமையும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிராக வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்றைக்க்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் வரும் 11 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் மதுரை உயர் நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்தது.