'விஜய் ஃபேன்ஸ்-க்கு ஒரு ஹாட் அப்டேட்...' 'மாஸ்டர்' திரைப்படம் எதில் வெளியாகிறது...? - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் முழு உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது தள்ளிக்கொண்டே சென்றது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நெட்பிளிக்ஸ்க்கு மாஸ்டர் திரைப்படம் விற்கப்பட்டது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதா என இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புகிறோம் என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நான் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
#MasterPressRelease pic.twitter.com/OZbAjNeX8T
— XB Film Creators (@XBFilmCreators) November 28, 2020

மற்ற செய்திகள்
