'தோழியின் கணவர் மீது வந்த காதல்'... 'அதை கேட்டதும் டபுள் ஒகே சொன்ன மனைவி'... தலைசுற்ற வைக்கும் தம்பதியரின் காதல் கதை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 08, 2021 10:25 AM

தனது கணவர் மீது தனது தோழிக்குக் காதல் எனத் தெரிந்ததும் அதை ஏற்றுக் கொண்டு, மூவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Indian Woman falls for Married Couple forming a Throuple

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய இளம்பெண் Piddu Kaur. இவருக்கும் இந்திய இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதது. இருவரும் மகிழ்ச்சியாக தங்களின் மண வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், சில மாதங்களிலேயே இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டது.

Indian Woman falls for Married Couple forming a Throuple

இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என முடிவு செய்து பிரிந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் திருமணம், அதன்பின்னர் நடந்த விவாகரத்து என Piddu Kaur சோகத்திலிருந்துள்ளார். அப்போது தான் தனது பள்ளி கால நண்பர்களான Speetie sing மற்றும் அவரது மனைவி sunnyயை Piddu Kaur சந்தித்துள்ளார்.

Indian Woman falls for Married Couple forming a Throuple

அவர்கள் Piddu Kaurக்கு ஆறுதல் கூறிய நிலையில், சிறிது காலம் தங்களது வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்கள். இதையடுத்து அங்குத் தங்கியிருந்த Piddu Kaurக்கு, தோழியின் கணவரான Speetie மீது காதல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று Speetieகும் Piddu Kaurம் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன்பிறகு நடந்த சம்பவம் தான் ஆச்சரியமான ஒன்றாகும்.

Indian Woman falls for Married Couple forming a Throuple

தனது கணவர் மீது தனது தோழிக்குக் காதல் இருப்பதை அறிந்த sunny அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு மூன்று பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் குடும்பம் நடந்த முடிவு செய்தனர். அதனடிப்படையில் 10 ஆண்டுகளாக மூன்று பேரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் பயனாக Speetie - sunny தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும், Speetie - Piddu Kaur தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

Indian Woman falls for Married Couple forming a Throuple

மூன்று பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உறவினர்கள் இந்தியாவில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இவர்களின் காதல் வாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவர்கள் யாரும் Speetie - sunny மற்றும் Speetie - Piddu Kaurவிடம் பேசுவது இல்லை.

Indian Woman falls for Married Couple forming a Throuple

எங்கள் குழந்தைகளோடு நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் எனக் கூறும் தம்பதியர், மூவருக்குள்ளும் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாததால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian Woman falls for Married Couple forming a Throuple | India News.