கட்டுக்கட்டாக சாக்கடையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகள்.. எப்படி இவ்ளோ பணம் இங்க வந்துச்சு? பரபரப்பு சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு: ஈரோட்டில் சாக்கடை கால்வாயில் 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணத்தை தேடும் மனிதர்கள்:
மனிதர்கள் பணம் சம்பாதிப்பதற்காக தினமும் படாத பாடு பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணத்திற்காக பல குற்ற செயல்கள், துரோகங்கள் என நடக்கிறது. பணத்தை வெறுத்து துறவு மேற்கொள்ளும் மனிதர்களும் உண்டு. ஆனால் அவர்கள் மிகவும் குறைவு. பணத்தை நேர்மையான வழியில் சம்பாதிப்பவர்கள் ஒருபுறம் என்றால், மோசமான வழிகளில் சம்பாதிப்பவர்கள் மறுபுறம். இப்படி மோசமான வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. அவர்களை பிரச்சனைகள் விடாமல் துரத்திக் கொண்டு வரும். அந்த பணத்தினால் மிகப்பெரிய மன அழுத்தத்தை சந்திப்பார்கள்.
இதனால் அவர்கள் மனம் பிறழ்வு அடையும். உடல் நலம் கெடும். எல்லா துன்பங்களையும் அனுபவித்தபின் இந்த பணம் தேவையில்லை என முடிவுக்கு வருவார்கள். ஆனால் பிரச்சனை எல்லை மீறி சென்றிருக்கும். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் மேட்டூர் சாலையில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை தூய்மைப் பணியாளர்களான சுந்தர்ராஜ், செந்தில் ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த கழிவுநீரில் சுமார் நூற்றுக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த ருபாய் நோட்டுக்களை கைப்பற்றிய சுந்தர்ராஜ், செந்தில் ஆகியோர் அதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது வரும் 19-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு:
எனவே உரிய ஆவணம் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். ஒருவேளை சாக்கடையில் இருந்த இந்த ருபாய் நோட்டுக்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு சென்றனவா என விசாரித்து வருகின்றனர். அல்லது வேறு யாருடைய பணமாவது தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டதா என்ற ரீதியிலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
