ஒரு வடை வாங்கப்போன கேப்-ல ஆசாமி செஞ்ச பகீர் காரியம்.. சிசிடிவியை மறந்துட்டு சித்து வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயியிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து பணத்தையும் மீட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
70 ஆயிரம் பணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முக சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் வேலு. 64 வயதான இவர் விவசாய பணியை மேற்கொண்டு வருகிறார். தொழில் காரணமாக சில நகைகளை அடமானம் வைத்திருக்கின்றார் வேலு. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள தனியார் பைனான்சில் அடகு வைத்த நகையை திருப்புவதற்கு சென்றிருக்கிறார். இதற்காக வீட்டிலிருந்து 70 ஆயிரம் ரூபாயை மஞ்சள் பையில் வைத்து எடுத்துச் சென்று இருக்கிறார் வேலு.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இன்று நகையை திருப்ப முடியாது எனவும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வரும்படியும் தெரிவித்திருக்கின்றனர். இதன்பிறகு அந்த அலுவகத்தில் இருந்து வெளியே வந்த வேலு, அருகில் இருந்த டீ கடைக்கு வடை வாங்க சென்றிருக்கிறார். அப்போது பணம் இருந்த மஞ்சள் பையை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து சென்றிருக்கிறார்.
அந்த கடையில் வடை இல்லாததால் அருகில் உள்ள மற்றொரு கடைக்கு சென்று வடை வாங்கிவிட்டு திரும்பிய வேலுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாகனத்தில் வைத்திருந்த மஞ்சள் பையை காணாததால் திகைத்து நின்ற அவர் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இதுகுறித்த விசாரணையை துவங்கினர்.
Images are subject to © copyright to their respective owners.
சிசிடிவியால் சிக்கிய ஆசாமி
அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர் காவல்துறையினர். அதன் பலனாக பணம் இருந்த பையை எடுத்தவரை அடையாளம் கண்டு அவரை போலீசார் மடக்கி பிடித்து இருக்கின்றனர். விசாரணையில் அவர் தளவாய்புரம் ஹோட்டல் தொழிலாளி சரவணன் என்பது தெரிய வந்திருக்கிறது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை மீட்டு விவசாயி வேலுவிடம் ஒப்படைத்திருக்கின்றனர் காவல்துறையினர். இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.