‘சட்டம் ஒழுங்கு சேவையில் மகேஷ் அகர்வால்!’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்!’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்! குவியும் பாராட்டுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் வகுப்புகளை அட்டென் செய்வதற்கான வசதிகள் இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி புரியும் வகையில் வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ள சென்னை காவல் ஆணையரின் 17 வயது மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அண்மையில் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடியான நலத்திட்டங்களையும், சட்டம் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகளை சீரிய முறையில் முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மகள் குனீஷா அகர்வால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து என்.ஜி.ஓ ஒன்றின் உதவியுடன் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தேவையான உபகரணங்களை சேகரித்து வருவதுடன், www.helpchennai.org என்கிற இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்புகள் தேவையான உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

மற்ற செய்திகள்
