'சென்னை'யில் மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா'... வெளியான 'லேட்டஸ்ட்' தகவலால் அச்சத்தில் 'மக்கள்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.
அடுத்தடுத்த கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களும் வழக்கம் போல இயங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இடையே சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.
இந்நிலையில், சென்னை வழக்கம் போல இயங்க ஆரம்பித்ததன் காரணமாக, மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மீண்டும் பணிக்காக சென்னைக்கு திரும்பினர். இதனிடையே, மீண்டும் சென்னையின் சில பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'சென்னையில் ஒரு சில மண்டலங்களில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து கொண்டே இருக்கிறது. 100 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால் அதில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகும் சூழல் உள்ளது' என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்குமா என சென்னை மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.