'இது என்ன பிரமாதம்...' 'இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு...' மாஸ்க் பரோட்டா செய்து 'மாஸ்' காட்டும் மதுரை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரோட்டாவிற்கு பெயர் போன மதுரையில் கொரோனா விழிப்புணர்வாக ஒரு ஹோட்டலில் மாஸ்க் வடிவிலான பரோட்டா செய்யப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பரோட்டாவிற்கு பெயர் போனது மதுரை. தூங்கா நகரமான மதுரையில் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மதுரையின் ஒரு ஹோட்டலில் அசத்தலான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மதுரையில் மிக ஃபேமசான ஹோட்டலாக கூறப்படும் டெம்பிள் சிட்டி ஹோட்டலில் 'மாஸ்க்' புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளர் குமார், 'கடந்த சில தினங்களாகவே மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மக்களிடம் எளிதில் சென்றடையும் என நினைத்தேன். அதனால் தான் மாஸ்க் வடிவிலான புரோட்டாவை தயாரித்தோம்' எனக் கூறினார்.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
