பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 25, 2019 01:15 PM
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவ்வழக்கில் திருப்புமுனையாக மேலும் ஒரு குற்றவாளி சரணடைந்துள்ளார்.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் கல்லூரி பெண்களிடம் நட்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையை சம்பாதித்து இளைஞர் கும்பல் ஒன்று கூட்டாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது. அதுமட்டுமல்லாமல், தகாத முறையில் அப்பெண்களை வீடியோ எடுத்ததும் தொடர்ந்து துன்புறுத்தியதும் தெரிய வந்தது.
முன்னதாக இதில் சம்மந்தப்பட்ட இளைஞர்களை பொதுவான சில இளைஞர்கள் விசாரித்தபோது, தவறு செய்த இளைஞர்களை அவர்கள் தாக்கினர். அதன் பின்னர், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக முன்வந்து புகார் அளித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் சகோதரர் நியாயம் கேட்டதால் அவர், பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் கும்பலுடன் தொடர்புடைய மணிகண்டன் என்பவரால் தாக்கப்பட்டார்.
அதன் பின்னர், இவ்வழக்கின் முதன்மை குற்றவாளியாகவும் தலைமறைவாகவும் இருந்த திருநாவுக்கரசு போலீஸாரிடம் சிக்கினார். எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கப்பட்டதையும் போலீஸார் வழக்காக பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவர் தற்போது சரணடைந்துள்ளார்.
இதே நேரத்தில் பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால், எஸ்.பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.