'நான் உன்னோட மனைவி டா, நம்பி தானே கல்யாணம் செஞ்சேன்'... 'கையிலிருந்த காதல் மனைவியின் ஆபாச படம்'... சென்னை இளைஞர் செய்த பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 18, 2020 10:20 AM

தன்னை நம்பி வரும் பெண்ணை கடைசி வரை நல்ல முறையில் வைத்துக் காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆணுக்கு அழகு. ஆனால் பணத்திற்காகச் சொந்த மனைவியையே சமூகவலைத்தளத்தில் கேவலமாகச் சித்தரித்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

Chennai Man uploads wife’s nude photos on facebook

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரித்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பருடன் அவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றதது.

இருவரின் இல்லற வாழ்வு சந்தோசமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல விஜயபாரதியின் உண்மை முகம் அந்த பெண்ணிற்குத் தெரிய வந்துள்ளது. எனக்கு 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக வேண்டும், எனக் கேட்கத் தொடங்கியுள்ளார். பின்னர் பணத்தைக் கேட்டுத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

Chennai Man uploads wife’s nude photos on facebook

இந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த பெண் ஆடிப் போனார். காதலித்து நம்பி திருமணம் செய்த கணவரே இப்படிச் சொல்வார் என்பதை எதிர்பார்க்காத அந்த பெண், கடந்த ஜூலை மாதம் விஜயபாரதியுடன் சண்டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்று விட்டார். மனைவி சண்டை போட்டுக் கொண்டு சென்றது கூட, பெரிய விஷயமாகக் கருதாமல், மீண்டும் தொலைப்பேசி மூலம் பணம் வேண்டும் எனத் தொடர்ந்து விஜயபாரதி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Chennai Man uploads wife’s nude photos on facebook

ஆனால் அந்த பெண் கொஞ்சம் விஜயபாரதியின் தொந்தரவைச் சட்டை செய்யாமல், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் எனத் தைரியமாக இருந்துள்ளார். மனைவியிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத  விஜயபாரதி, ஆத்திரத்தில் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து விஜயபாரதி அதிர்ந்து போன நிலையில், அந்த பெண்ணின் உறவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்ததோடு, மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியது, பேஸ்புக்கில் மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டது போன்ற குற்றங்களை உறுதி செய்தார்கள். வரதட்சணை கேட்டுக் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காகத் தாலி கட்டிய மனைவி என்று கூட பாராமல், மனைவியின் ஆபாசப் படத்தை முகநூலில் கணவரே பதிவிட்டுள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Man uploads wife’s nude photos on facebook | Tamil Nadu News.