'அதுக்காக' தான் பிளான் பண்ணி ஆட்டோல ஏத்திருக்காரு...! 'திடீர்னு கத்தியை காட்டி...' 'பதறி போன பயணி...' - சிசிடிவி பார்த்து ஷாக்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆட்டோவில் வந்த பயணியிடம் ஓரின சேர்க்கைக்கு இணங்குமாறு கூறி கத்திக்காட்டி மிரட்டிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணிபுரியும் நாகராஜ், அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தன் மகனுக்கு பெண் பார்க்க நாகராஜ், பிராட்வேயில் இருந்து ஆட்டோ மூலமாக அண்ணா ஆர்ச் பகுதியில் இறங்கியுள்ளார்.
பின்னர் தன் வீட்டிற்கு செல்ல மீண்டும் ஆட்டோவிற்காக காத்திருந்துள்ளர். இந்நிலையில் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நாகராஜிடம் அரும்பாக்கம் வழியாக செல்லப் போவதாக கூறி நாகராஜை ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
இந்நிலையில், அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே சென்ற ஆட்டோ ஓட்டுநர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நாகராஜை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த நாகராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்டோ ஓட்டுனரின் கோரிக்கைக்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜை கத்தியால் தாக்கி கையில் வைத்திருந்த 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல்நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்ததின் பெயரில் மேற்கொண்ட விசாரணையில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் அமைந்தகரை கதிரவன் காலனியை சேர்ந்த கொரில்லா என்கிற சார்லஸ் என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்த ஆட்டோ, பட்டாக்கத்தி, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
