"நன்றி அப்பா".. கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ.. பின்னணி என்ன..?.. வைரலாகும் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ, குரு பூர்ணிமாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | JEE முதல் நிலைத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம்.. சாதித்துக்காட்டிய கோவை மாணவி தீக் ஷா..!
குரு பூர்ணிமா
இந்திய மரபில் குருவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அதனாலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என முன்னோர்கள் வகைப்படுத்தியிருக்கின்றனர். நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்தி, உயர்ந்த கருத்துக்களின் மூலம் மேன்மையடைய செய்யும் ஆசிரியர்களை கவுரவிக்கவே அவர்களை தெய்வத்துக்கு ஒரு படி மேலே நிறுத்தி வழிபட்டிருக்கின்றனர் முன்னோர்கள். அந்த வகையில் அவர்களை சிறப்பிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தங்களுடைய குருவை பலரும் நினைவுகூர்வது வழக்கம்.
குஷ்பூ
இந்நிலையில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பூ தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு ட்விட்டர் மூலமாக நன்றி தெரிவித்துள்ளார். தன்னை அரசியலுக்கு அழைத்துவந்து, சுயமரியாதை, கருணை ஆகிவற்றை கற்றுக்கொடுத்த கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார் குஷ்பூ.
அந்த பதிவில்,"இன்று குரு பூர்ணிமா 2022 முன்னிட்டு, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதநேயம், சமத்துவம், அரசியல் கருணை, எப்போதும் சுயமரியாதையை விட வேறெதுவும் பெரிதல்ல ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்த ஒருவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படுவார், என் பார்வையில் எப்போதும் உயர்ந்த மரியாதையுடன் இருப்பார். நன்றி அப்பா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோடி வாழ்த்து
இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி மக்களுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையைப் பற்றி நமக்கு பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியைத் தெரிவிக்கும் நாள். நமது சமூகம் கற்றலுக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.