“மாற்றம் பற்றிய ட்வீட்!”.. “ராஜினாமா கடிதம்!”.. “டெல்லி ப்ளான்ஸ்!” .. குஷ்புவால் அடுத்தடுத்து.. பரபரப்பாகும் தேசிய அரசியல் களம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த திங்கட்கிழமை அன்று குஷ்பு டெல்லி சென்று பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அதை உறுதிப்படுத்தும் வகையில் குஷ்பு தனது கணவருடன் டெல்லி செல்ல விமான டிக்கெட் புக் செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலையம் வந்தடைந்த குஷ்புவிடம் “பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளதே, இது உண்மையா?” என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, கேள்வி முடியும் முன்பே, “நோ கமெண்ட்ஸ்” என கூறி சென்றார். ஆனாலும், “பாஜகவில் இணைவயவே டெல்லி செல்கிறீர்கள், எனக் கூறப்படுகிறதே?” என அடுத்தடுத்த கேள்விகளை நிரூபர்கள் எழுப்பினர்.
இந்நிலையில் இன்று குஷ்பு பாஜகவில் இணையவிருப்பதாகவும், அது தொடர்பாக டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை இன்று சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் உறுதிபட வந்த வண்ணம் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்புவை நீக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, குஷ்பு தனது பொறுப்பை ராஜினாமா செய்த கடிதமும் வெளியாகியது.
சோனியா காந்திக்கு குஷ்பு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “கட்சியில் உண்மையாக உழைக்க வேண்டும் என்று விரும்பும் என்னை போன்றவர்களை, கள நிலவரம் தெரியாத உயர்பதவிக்காரர்கள் ஒடுக்குகிறார்கள். நான் பணம், புகழுக்காக காங்கிரஸின் சேரவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். தங்கள் மீதான மதிப்பு மாறாததாக இருக்கும். ராகுல் காந்தி ஜி உள்ளிட்டோருக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Resignation letter by @khushsundar . She officially declared her move now. pic.twitter.com/MhJll7lw2l
— Karthigaichelvan S (@karthickselvaa) October 12, 2020
முன்னதாக பார்வைகள், புரிதல்கள், விருப்பு, வெறுப்புகள், காலத்திற்கேற்ப மாறும் என்றும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றும் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
