சல்மான் கானை கொலை செய்ய 4 லட்சம் ரூபாய்க்கு துப்பாக்கி??.. பீதியை ஏற்படுத்திய குற்றவாளியின் வாக்குமூலம்??.. அதிர வைக்கும் பின்னணி

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 13, 2022 04:34 PM

பிரபல பஞ்சாபி பாடகராக இருந்த சித்து மூஸ் வாலா, பஞ்சாப்பின் மன்சா மாவட்டத்தில் வைத்து கடந்த மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

lawrence bishnoi says salman khan wants to apologize

Also Read | "இங்க இருக்குற செடி'ய தொட்டா அவ்ளோ தான்.." Gate'ல இருக்கும் Warning.. "பேர கேட்டாலே பீதியா இருக்கே.." பகீர் கிளப்பும் தோட்டம்

இந்த கொலையின் பின்னால், மூளையாக செயல்பட்டதன் பெயரில், லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லாரன்ஸ்ஸிடம் நடந்த விசாரணையின் போது, அவர் சல்மான் கான் குறித்து போலீசாரிடம் சொன்னதாக வெளி வரும் தகவல், பலரையும் பீதி அடையச் செய்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு, மான் ஒன்றை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு ஒன்று பதியப்பட்டு, அவர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவர் ஜாமீனிலும் வெளி வந்தார்.

lawrence bishnoi says salman khan wants to apologize

தங்களின் சமுதாய வழக்கப்படி, சிங்காரா என்ற அந்த மான், தங்களின் பகவான் ஜம்பேஷ்வரின் மறு அவதாரமாக கருதப்படுவதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதனால், அதனை வேட்டையாடிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை ஆகியோர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தானும் தனது சமுதாயமும் நிச்சயம் சல்மான் கானை மன்னிக்க மாட்டோம் என்றும் லாரன்ஸ் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், தான் வேறு வழக்குகளில் தலை மறைவாக இருந்து வந்ததால், மானை வேட்டையாடிய சல்மான் கானை கொலை செய்வதற்காக ஆள் ஒன்றை ஏற்பாடு செய்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல், சல்மான் கானை கொலை செய்ய சுமார் 4 லட்ச ரூபாயில் துப்பாக்கி ஒன்றை அவர் வாங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

lawrence bishnoi says salman khan wants to apologize

அதே போல, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட, லாரன்ஸ் கும்பலில் இருந்து  சிலர், சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு மிரட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது போக, சல்மான் கான் மற்றும் அவரது தந்தை மன்னிப்பு கேட்பது தான் ஒரே வழி என்றும், இல்லை என்றால் அவர்களை கொலை செய்வதை பற்றி தான் யோசிப்போம் என்றும் லாரன்ஸ் தெரிவித்ததாக பகீர் கிளப்பும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read | "உலகின் முதல் கர்ப்பிணி மம்மி'ய ஆய்வு செஞ்சப்போ.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்.. "2000 வருசத்துக்கு முன்னாடியே இப்டி நடந்துருக்கா??"

Tags : #LAWRENCE BISHNOI #SALMAN KHAN #APOLOGIZE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lawrence bishnoi says salman khan wants to apologize | India News.